மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா

மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிசோதனைகளின் முடிவுகளின் படி இம்ரான் கான், காஷிப் பாட்ஹி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்று கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.