கொரோனாவைத் தொடர்ந்து உலகை அழிக்க வரும் பன்றி வைரஸ் : ஆசியாவில் 10 நாடுகள் அவதானத்தில்

கொரோனாவைத் தொடர்ந்து உலகை அழிக்க வரும் பன்றி வைரஸ் : ஆசியாவில் 10 நாடுகள் அவதானத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொவிட்-19 தொற்றின் விளைவுகள் இன்னும் முடியாத நிலையில் சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அண்மையில் பரவத் தொடங்கியுள்ள இந்த காய்ச்சலானது, பன்றிகளிடையே பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.
இப்போது இது உடனடியான பிரச்சினை இல்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர். மேலும் இதே போன்றுதான் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் இற்கு சீனா எவ்வித முன்னேற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் இதனால் உலகளவில் பாரியளவு மனிதப் பலிகள் பதிவாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது. மேலும், முதலில் குறித்த வைரஸ் ஆசியாவின் 10நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.