கொரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான்

கொரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான தாக்கம் இனிதான் ஏற்படப்போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் சுமார் 10,586,591 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்றினால் 513,929 உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்தார். தற்போது இருப்பதைக் விடவும் வைரசின் மோசமான பாதிப்பை உலகம் இனிதான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகளோடு அது உருவாகிய இடத்தை கண்டறிவதும் அவசியம் என்பதால், சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பவிருப்பதாகவும் அதானோம் கூறியுள்ளார்.

இந்த வைரஸின் அனைத்து விவரங்களையும் தெரிந்து அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும் என்பதோடு அப்போதுதான் எதிர்காலத்துக்காக நாம் தயாராக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

COMMENTS

Wordpress (0)