இதுவரை 848 கடற்படையினர் குணமடைந்தனர்

இதுவரை 848 கடற்படையினர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 848 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 904 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.