மியன்மார் மண்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு

மியன்மார் மண்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார் ) – மியன்மாரில் வடக்கு பிராந்தியத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு மியன்மாரில் கச்சின் மாநிலத்தின் ஹபகாந்த் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது