பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 11 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் அனைத்து பல்கலைக்கழகங்களின் 1 ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான எந்த ஒரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.