தேர்தல் ஆணைக்குழுவில் இன்று சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே இன்று(17) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தேர்தலில் வாக்களிப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நெறிமுறைகளை இந்த சந்திப்பில் பேசவுள்ளனர்.

கொழும்பு, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் குறித்த சந்திப்பு முற்பகல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.