மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 349 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் கட்டார் தோஹா நகரில் இருந்து 14 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.30 அனவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி ஆர் பிரசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

COMMENTS

Wordpress (0)