இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரும் நடவடிக்கை இன்று(08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார,

இதற்கமைய இந்தியா, டுபாய், மாலைதீவு, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இன்றைய தினம் இலங்கையர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.