அமெரிக்கா துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தேர்வு

அமெரிக்கா துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தேர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்கா ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார்.

அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரீசை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என பதிவிட்டுள்ளார்.