நியூசிலாந்தில் 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

நியூசிலாந்தில் 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  நியூசிலாந்து) – கொவிட் 19  (கொரோனா )வைரஸ் தொற்று காரணமாக நியூசிலாந்தில் 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆக்லாண்ட் நகரில் நேற்றைய முந்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நியூசிலாந்தின் ஆக்லாண்ட் நகரை மீண்டும் முழுமையாக முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் ஆக்லாண்டில் இனங்காணப்பட்ட குடும்பத்துடன் தொடர்பில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

இதற்கமைவாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.