கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு திரும்பவும்

கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு திரும்பவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 17ம் திகதி முதல் நாட்டில் உள்ள சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மானியங்கள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல் நேற்று(13) இடம்பெற்றபோது கல்வி சாரா ஊரியர்கள் விடயமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி தீர்மானமும் எட்டப்பட்டது.

கொரோனா தாக்கத்தின் பின்பு பல பல்கலைக் கழகங்களில் கல்வி சாரா ஊழியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பாத நிலமை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.