தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு 2 இலட்சத்து 11 ஆயிரத்து 459 பேர் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்து 186ஆக குறைவடைந்துள்ளது.

இதற்கமைய தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையானது 3.9 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.