இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

தேர்தல் திணைக்களம் அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இன்று(30) விஷேட வைபவங்கள் நடைபெறவுள்ளது

1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் திணைக்களம் இன்று அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது.

இதனை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் வைபவங்களின் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும், தேர்தல் திணைக்களத்தின் 60வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு விசேட முத்திரை மற்றும் தபால் உறைகளும் இன்று வெளியிடப்படவுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை வெளியிட்டு வைக்க, முதல் முத்திரை மற்றும் தபால் உறையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.