இதுவரை 1014 பேர் கைது

இதுவரை 1014 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் ஒக்டோபர் மாதம் 30 ம் திகதியிலிருந்து இதுவரை 1014 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்