கொழும்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

கொழும்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,038 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 627 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,032 ஆக உயர்வடைந்துள்ளதுடன், தொடர்ந்தும் 6,877 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டம் 402
கம்பஹா மாவட்டம் 66
களுத்துறை மாவட்டம் 30
கண்டி மாவட்டம் 01
குருணாகல் மாவட்டம் 04
இரத்தினபுரி மாவட்டம் 35
அம்பாறை மாவட்டம் 14
கேகாலை மாவட்டம் 07
காலி மாவட்டம் 15 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.