எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட (பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பிய) கொரோனா தொற்றாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது அவர் எச்சில் துப்பியதுடன், வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.