உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று

உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்று(05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதில் 550 பேரிடம் உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 510 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.