பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பொலன்னறுவை) – ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள பராக்கிரம வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.