முள்ளிவாய்க்கால் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் தொடர்பும் இல்லை

முள்ளிவாய்க்கால் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் தொடர்பும் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, அது நிர்வாகத்தின் முடிவு என இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கபட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியது. இன்றும் மாணவர்கள் வீதிகளில் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.