நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் சற்றுமுன்னர் நாட்டப்பட்டது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை இன்று (11) அதிகாலை 3 மணியளவில் சந்தித்த சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.