மேலும் 46 பேருக்கு தொற்று

மேலும் 46 பேருக்கு தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வாரத்தில் மாத்திரம் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 2,334 பேர் பிசிஆர் மற்றும் உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று(11) மாத்திரம் 121 பேர் குறித்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைவாக 46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)