‘மாநாடு’ மோசன் போஸ்டர் ரிலீஸ்

‘மாநாடு’ மோசன் போஸ்டர் ரிலீஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – நடிகர் சிம்புவின் மாநாடு படப் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு பட மோசன் போஸ்டர் வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’இன்று பொங்கல் தினத்தில் உலகெங்கிலும் வெளியாகின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாஸ்ட்ர ரிலீசானாலும் இதற்குப் போட்டியாக வெளியான ஈஸ்வரன் பட வெற்றியால் சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

அரசியல் களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் வரவேற்பு பெறாத நிலையில், அவர் தற்போது கமிட்டாகியுள்ள படங்களால் அவர் மீண்டும் பிஸியாகிவிட்டார். ஆன்மீகத்திலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இன்னும் 25 நிமிடத்தில் சிம்புவின் மாநாடு பட போஸ்டர் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்த நிலையில் தற்போது இதன் மோசன் போஸ்டரை சிம்பு வெளியிட்டுள்ளார்.

மிகவும் வித்தியாசமாகவும் அதேசமயம் அரசியல் கட்சிக்கொடுகளில் சிலம்பரசன், வெங்கட் பிரபு பெயர்கள் வருவதுபோலவும் சிம்பு அப்துல் காலிக் கதாப்பாத்திரத்தில் கையில் பையுடன் தோன்றுவதாக மாஸாக மோசன் போஸ்டர் உள்ளது. இசையில் யுவன் தனி ஸ்கோர் செய்து தீம் மியூசிக்கை தெறிக்கவிட்டுள்ளார்.

குறைந்த நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் இதை லைக் செய்துள்ளனர். தற்போது மாநாடு பட போஸ்டர் வைரலாகி வருகிறது.