´சிட்டி பஸ்´ பேருந்து சேவை அமுலுக்கு

´சிட்டி பஸ்´ பேருந்து சேவை அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ´சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை இன்று(15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக கொழும்பு பிரதேசத்தை சுற்றியுள்ள அலுவலகங்களில் கடமைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக மாக்கும்புரவில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த அதிசொகுசு பேருந்து சேவை மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.