அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | அநுராதபுரம் ) – அநுராதபுரம் அவந்தி தேவி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள பெருமளவு சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகிய தலைமை வார்டன் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தில் இயங்கிவரும் அவந்தி தேவி சிறுவர் பராமரிப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்கள் பலரும் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாக, பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் சிறுவர் விவகார அமைச்சிற்கு முறையிடப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக தற்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.