எனக்குப் பின்னரும் தமிழனே

எனக்குப் பின்னரும் தமிழனே

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன், தற்போதைய வீரர்களில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே தனது சாதனையை மிஞ்ச முடியும் என கூறியுள்ளார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் The Telegraph-க்கு முரளிதரன் அளித்த பேட்டியில் கூறியதாவது,
அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போதும் விளைாயடி வரும் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியோன், தனது சாதனை மிஞ்ச ‘போதுமானதாக இல்லை’ என கூறினார்.

“.. அஸ்வின் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதால், 800 விக்கெட் சாதனையை மிஞ்ச அவருக்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர வேறு எந்த இளம் பந்து வீச்சாளரும் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை.

நாதன் லியோன் போதுமானவராக இல்லை. அவர் 400 விக்கெட்டுகளுக்கு அருகில் உள்ளார், ஆனால் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற அவர் இன்னும் பல, பல போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும் என முரளிதரன் தெரிவித்துள்ளார்.

34 வயதான தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 74 டெஸ்ட் போட்டிகளில் 377 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் 33 வயதான அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியோன், 99 டெஸ்ட் போட்டிகளில் 396 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.