முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் இன்று(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான, போபத் எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாணந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 675 கொடவத்த கிராம சேவகர் பிரிவு மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மக்கொன கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேகவர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.