இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தோனேஷியா) – இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவின் வடகிழக்கு பகுதியில் நேற்றைய தினம் 6.2 ரிக்டர்அளவில் இன்று குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளைகுறித்த நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும்மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள்சேதமடைந்துள்ளதுடன் குறித்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.