கொரோனா : உலகளாவிய பாதிப்பு 9.43 கோடியை கடந்தது

கொரோனா : உலகளாவிய பாதிப்பு 9.43 கோடியை கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9.43 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 94,312,195 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,017,843 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 667,344,342 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.