மேலும் சில பகுதிகள் முடக்கம்

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழக்கு கல்லொலுவ கிழக்கு மற்றும் கல்லொலுவ மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரக்காமுர (356), மீதெனிய (356 B) மற்றும் தெஹிப்பிட்டிய (356 A) (மாத்தாவ கிராமம்) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.