ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு 4 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகுவதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் குறித்து பாராளுமன்ற பொதுச்செயலாளர் சட்டமா அதிபரிடம் வினவியுள்ளார். இதற்கமையவே சட்டமா அதிபர் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு இதனை அறிவித்துள்ளார்.