மேல்மாகாண பாடசாலைகள் குறித்த தீர்மானம் இன்று

மேல்மாகாண பாடசாலைகள் குறித்த தீர்மானம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இன்று இதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அன்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலிலலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து, மாகாண ரீதியாக அல்லது மாவட்ட ரிதியாக அல்லது பாடசாலை ரீதியாக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.