முதல் வர்த்தக விமானம் நாட்டை வந்தடைந்தது

முதல் வர்த்தக விமானம் நாட்டை வந்தடைந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமான நிலையம் மீளவும் இன்று(21) திறக்கப்பட்டதனைத் தொடர்ந்து முதலாவது வணிக விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

ஓமான் – மஸ்கட் நகரில் இருந்து ஓமானுக்கு சொந்தமான WY 371 என்ற முதலாவது வணிக விமானமே இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் ஊடாக 50 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததுடன், அவர்கள் அனைவரும், இலங்கை இராணுவத்தினால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.