பாகிஸ்தான் சுப்பர் லீக் : பார்வையாளர்கள் தொடர்பில் கவனம்

பாகிஸ்தான் சுப்பர் லீக் : பார்வையாளர்கள் தொடர்பில் கவனம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருக்கைகளின் அடிப்படையில் நூற்றுக்கு 30 வீதமான பார்வையாளர்களை அனுமதிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கராச்சி மற்றும் லாஹுர் கடாபி மைதானங்களில் போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுப்பர் லீன் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.