கடந்த 24 மணித்தியாலத்தில்  887 : 02

கடந்த 24 மணித்தியாலத்தில்  887 : 02

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 887 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேலியகொட கொவிட் கொத்தணியிலிருந்து – 866 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து – 7 பேரும், வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 14 பேரும் (கட்டாரிலிருந்து 8 பேர் , குவைத்திலிருந்து 3 பேர், ரஷ்யாவிலிருந்து 1, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 1, உக்ரேனிலிருந்து 1)

மேலும், நாட்டில் அன்மைய நாட்களில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,076 ஆக அதிகரித்துள்ளது,

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.

No photo description available.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47,984 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7,816 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.