கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 9 .00 மணிதொடக்கம் கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாக இந்த நீர்விநயோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.