இம்முறையும் ஒலிம்பிக் இரத்து

இம்முறையும் ஒலிம்பிக் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா பாதிப்புகளால் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இரத்து செய்ய திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் வரை நடந்த நிலையில் கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றால் ஜப்பானில் கொரோனா பரவல் தீவிரமடையலாம் என பொதுமக்கள் அஞ்சுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனால் ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யலாமா என்பது குறித்து ஜப்பான் அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.