பாணந்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் அடங்கிய குழு

பாணந்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் அடங்கிய குழு

(ஃபாஸ்ட் நியூஸ் |  களுத்துறை) – பாணந்துறை – பள்ளிமுல்ல பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யவதற்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் விசேட அதிரப்படையின் அதிகாரிகளும் விசாரணைகளில் இணைந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் பல குழுக்கள் ஊடாக சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை 4 பேரிடம் பொலிசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(25) முற்பகல் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரண்டு பேரினால் முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் மீது டி-56 ரக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.