கடந்த 24 மணித்தியாலத்தில் 737 பேர் சிக்கினர்

கடந்த 24 மணித்தியாலத்தில் 737 பேர் சிக்கினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் 737 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 59,167 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளர்களும் பேலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதேவேளை நேற்றைய தினம் 653 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையினால், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 50,337 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,543 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்று சந்தேகத்தில் 683 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 287 பதிவாகியுள்ளது.