ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை நிறைவு செய்யும் இறுதி அமர்வு, இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, விசாரணை அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.