சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புரூஸ் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புரூஸ் ஓய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் |  அவுஸ்திரேலியா) – சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புரூஸ் ஆக்ஸன்போர்ட் (Bruce Oxenford) ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

60 வயதான இவர், இதன் மூலம் 15 ஆண்டுகால அவரது சர்வதேச நடுவர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2012 முதல் எம்பிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் பேனலின் வழக்கமான உறுப்பினரான ஆக்சன்போர்ட், 62 டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியுள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா-இந்தியா தொடரின் இறுதிப் போட்டியிலேயே அவர் இறுதியாக பணியாற்றியுள்ளார்.

2006 ஜனவரியில் அவுஸ்திரேலியாவிற்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையிலான ஒரு இருபதுக்கு 20 போட்டியில் நடுவராக சர்வதேச அளவில் அறிமுகமானார்.

கடைசி மூன்று ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திலும், கடைசி மூன்று ஐ.சி.சி. ஆண்களின் டி 20 உலகக் கிண்ணத்திலும் அவர் பணியாற்றினார்.

அவர் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கிண்ணத்தில் அதிகாரப்பூர்வ குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

நடுவராக மாறுவதற்கு முன்பு, ஆக்சன்போர்ட் குயின்ஸ்லாந்து அணி சார்பில் எட்டு முதல் தர போட்டிகளில் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.

குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஆக்சன்போர்ட் சர்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் உள்நாட்டு போட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.