இராஜாங்க அமைச்சருக்கு தொற்று உறுதியாகவில்லை

இராஜாங்க அமைச்சருக்கு தொற்று உறுதியாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என அவரது ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

 

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும், தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா பண்டாரவுடன் கலந்து கொண்டதன் காரணமாக அமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானார்.

இருப்பினும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பின்னர் பி.சி.​ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர், கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் இந்திக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.