கொரோனா தொற்றாளர்கள் 63,000ஐ நெருங்குகிறது [UPDATE]

கொரோனா தொற்றாளர்கள் 63,000ஐ நெருங்குகிறது [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 காரணமாக நாடளாவிய ரீதியாக மரணித்தோரின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் 8 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
♦பேலியகொடை கொவிட் 19 கொத்தணி -852
♦வெளிநாட்டில் இருந்து வந்தோர் 40 பேர் | ஐக்கிய அரபு இராச்சியம் -33, ஓமான்-07

இதுவரையில் 62,445 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.

2021-01-28 COVID19 DEATHS - SRI LANKA

குறிப்பு : மரண எண்ணிக்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்ச்சியாக மாறுபட்டு வெளிவருகின்றமையினை கருத்திற் கொள்ளவும்.

COMMENTS

Wordpress (0)