பாதிக்கப்பட்டோரை பாதுகாக்க சர்வதேச தலையீடு அவசியம்

பாதிக்கப்பட்டோரை பாதுகாக்க சர்வதேச தலையீடு அவசியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய அதன் அங்கத்துவ நாடுகள் நடந்து கொள்ள வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வு தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் அண்மித்த மற்றும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவை புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொடூர குற்றங்களுக்கான தண்டனையற்ற நிலைமை மற்றும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தௌிவாக எடுத்துரைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.

இலங்கையின் இந்த பிரச்சினைகளை தீர்க்க மனித உரிமைகள் பேரவை பல ஆண்டுகளாக சந்தரப்பங்களை வழங்கியுள்ளதாகவும் இதன் பின்னர் பாதிக்கப்பட்டுள்ள தரப்பை பாதுகாக்க சர்வதேசத்தின் தலையீடு அவசியம் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.