சுதந்திர தின ஒத்திகை தொடர்பிலான அறிவித்தல்

சுதந்திர தின ஒத்திகை தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 73ஆவது சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகள் இன்று(30) முதல் இடம்பெறவுள்ள நிலையில், விமானப்படையினரால் கொழும்பு மற்றும் அதனை அன்றிய பகுதி மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று(30) முதல் எதிர்வரும் 04ம் திகதி வரை, ட்ரோன் கருவிகள், காத்தாடிகள் மற்றும் பலூன் என்பவற்றை வானில் பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திகை நடவடிக்கைகளின் நிமித்தம், விமானங்கள் குறுகிய உயரத்தில் பயணிக்கவுள்ள நிலையில், ட்ரோன் மற்றும் காத்தாடி என்பவற்றை பறக்கவிடுவதின் ஊடாக தடைகள் ஏற்படலாம் என விமானப்படை தெரிவிக்கின்றது.

இந்நிலையிலேயே, இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரை, அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

COMMENTS

Wordpress (0)