தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு கோரிக்கை

தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(01) முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 திகதி 73 ஆவது சுதந் திர தினத்தை முன்னிட்டு சகல வீடுகளிலும் , வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வானங்களிலும் இன்று பெப்ரவரி மாதம் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன்,அரச அலுவலகங்கள் அமைந்துள்ள சகல கட்டடங்களையும் பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.