ட்ரம்ப் நோபல் பரிசினை தக்கவைத்துக் கொள்வாரா?

ட்ரம்ப் நோபல் பரிசினை தக்கவைத்துக் கொள்வாரா?

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – 2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது தவிர உலக பொது சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருவாகிய ‘Black Lives Matter’ ஆகிய பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர்களுடைய பெயர்களை பல்வேறு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நோபல் பரிசை வென்றவர்கள் நோர்வே நோபல் பரிசு தெரிவுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ‘நோபல் பரிசு தெரிவுக் குழு’ பரிசீலனை செய்து எதிர்வரும் ஒக்டோபரில் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவிக்கும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக இந்தப் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு ஐ.நா வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.