தாயும் சிறுவனும் வெட்டிக் கொலை

தாயும் சிறுவனும் வெட்டிக் கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் |  அம்பாறை) -அம்பாறை வராப்பிட்டிய பகுதியில் தாய் மற்றும் சிறுவன் தமது வீட்டுக்குள் இன்று(01) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், கொலையாளி குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)