ஐபிஎல் தொடர் இந்தியாவில்

ஐபிஎல் தொடர் இந்தியாவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ஐபிஎல் தொடரின் 14-வது தொடர் ஏப்ரல் 2-வது வாரத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வீரர்களின் ஏலம் இந்த மாத்தில் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூர் போட்டியான ஆண்களுக்கான 50 ஓவர் போட்டி கொண்ட விஜய் ஹசாரே தொடர், பெண்களுக்கான தேசிய ஒருநாள் போட்டி பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கு பிறகு ஏப்ரல் 2-வது வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.