சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு

சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 73வது தேசிய சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்றைய தினமும் சுதந்திர மாவத்தையை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இது தவிர, தாமரைத் தடாகத்தை அண்மித்த வீதிகள், வாசிகசாலை, கிளாஸ்ஹவுஸ் போன்ற வீதிகளுடனான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.